தற்போதைய செய்திகள்

பொதுமக்களிடம் ரூ.5 கோடியை சுருட்டிய நிதி நிறுவன உரிமையாளர்கள்- அதிரடி காட்டிய குற்றப்பிரிவு போலீசார்

தந்தி டிவி

கரூரில் பொதுமக்களிடம் ஐந்து கோடி ரூபாய் வரை பணம் பெற்று ஏமாற்றிய புகாரில் நிதி நிறுவன உரிமையாளர்கள் 10 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

வேலாயுதம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வந்த கீதாஞ்சலி ஆட்டோ பைனான்ஸ், சிவ பார்வதி பைனான்ஸ், எஸ்.ஜி பைனான்ஸ் ஆகிய 3 தனியார் நிதி நிறுவனத்தை 15 பேர் நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில், தங்கள் நிறுவனங்களில் டெபாசிட் செய்தால் இரட்டிப்பாக பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறி பொதுமக்களிடம் ஐந்து கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து 25க்கும் மேற்பட்டோர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார்,15 பேரில் 10 பேரை கைது செய்தனர். அவர்களிடம் வெங்கமேடு பகுதியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் 3 மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து, 10 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்