தற்போதைய செய்திகள்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒலித்த.. 'கால்பந்து ஜாம்பவான் பீலே' இரங்கல் வாசிப்பு..

தந்தி டிவி

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒலித்த.. 'கால்பந்து ஜாம்பவான் பீலே' இரங்கல் வாசிப்பு.. 

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டத்தில், மறைந்த உறுப்பினர் மற்றும் பிரபலங்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு, கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

2023ம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளிலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஆளுநரின் நடவடிக்கையை தொடர்ந்து, இன்று இரண்டாம் நாளாக பேரவை கூடியது. காலை 10 மணிக்கு அவை தொடங்கியதும், தமிழறிஞர் முனைவர் க.நெடுஞ்செழியன், ஆரூர் தாஸ், தமிழறிஞர் ஒளவை நடராஜன், ஓவியர் மனோகர் தேவதாஸ், மருத்துவர் மஸ்தான், கால்பந்து ஜாம்பவான் பீலே ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. தொடர்ந்து, மறைந்த ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெராவின் மறைவுக்கும் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு, மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், மறைந்த உறுப்பினருக்கு மரியாதை செலுத்தும் விதமாக சட்டப்பேரவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. நாளை சட்டப்பேரவை கூட்டம் மீண்டும் நாளை நடைபெற உள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்