தற்போதைய செய்திகள்

தண்ணீர் தொட்டியில் ரசாயனம் கலந்த மர்ம நபர்... விசாரணையில் கிடைத்த முக்கிய தகவல்.. ஷாக்கான தலைமை ஆசிரியர்

தந்தி டிவி

வீரணம்பட்டி பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இருக்கும் தண்ணீர் தொட்டிகளில் ரசாயனம் கலக்கப்பட்டதாக, பள்ளியின் தலைமை ஆசிரியர் புகாரளித்தார். புகாரின் பேரில், வட்டாட்சியர் முனிராஜ் தலைமையில் ஆய்வு செய்யப்பட்டதில், சோப் ஆயில் கலக்கப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் விசாரணைக்கு வட்டாட்சியர் பரிந்துரைத்த போதிலும், உரிய விசாரணை நடைபெறாததால், குற்ற புலனாய்வு துறை ஆய்வாளரிடம், வட்டாட்சியர் புகாரளித்தார். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்தில், குளித்தலை சரக டிஎஸ்பி ஸ்ரீதர் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் பள்ளியில் உள்ள மூன்று தண்ணீர் தொட்டிகளிலும் சோப் ஆயில் கலந்தது தெரிய வந்தது. இதன் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அடுத்தகட்ட ஆய்விற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்.பி சுந்தரவதனம் உள்ளிட்ட அதிகாரிகளும் சோதனை நடத்தினர்.

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்