தற்போதைய செய்திகள்

ஆன்லைன் வர்த்தகம் செய்து வந்த முதியவர் மர்ம மரணம் - போலீசார் தீவிர விசாரணை..

தந்தி டிவி

கடலூர் அருகே ஆன்லைனில் வர்த்தகம் செய்து வந்த முதியவர் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்...

கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்தவர் 70 வயதான முதியவர் உத்திராபதி. சோடா வியாபாரியான இவர், பல ஆண்டுகளாக ஆன்லைன் வர்த்தகம் செய்து வந்த நிலையில், அதில் லட்சக்கணக்கில் பணத்தை முதலீடு செய்து நஷ்டமடைந்ததாக கூறப்படுகிறது. மேலும், உறவினர்கள் பலரிடமிருந்து கடன் பெற்று முதலீடு செய்திருந்ததால் மன உளைச்சலில் இருந்த உத்தராபதி வீட்டை விட்டு சென்ற நிலையில், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால், முதியவரை குடும்பத்தார் தேடி வந்த நிலையில், கீழ்செருவாய் அருகே மரத்தில் தூக்கில் தொங்கிய படி முதியவர் சடலமாக கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முதியவரின் உயிரிழப்பு கொலையா?... தற்கொலையா ? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்...

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு