தற்போதைய செய்திகள்

நாட்டை உலுக்கிய பெண் மருத்துவர் கொலை.. "அதிகாலை 4.17-இல் இருந்து 4.38-க்குள்.." ஆன்லைன் வழியாக ஆஜராகிய டிஜிபி

தந்தி டிவி

கேரளாவில் பெண் மருத்துவர் வந்தனா தாஸ் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, அந்த மாநில உயர்நீதிமன்றத்தில் காவல் துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

அந்த அறிக்கையில், குற்றவாளி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது முதல் வந்தனா தாஸ் கொல்லப்படுவது வரை, விரிவான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. மருத்துவமனையில் கொலை, வன்முறை உள்ளிட்ட அனைத்து சம்பவங்களும் அதிகாலை 4:17 மணிக்குத் தொடங்கி 20 நிமிடங்களில் நடந்து முடிந்து விட்டதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் பதிவான சிசிடிவி காட்சிகளையும் காவல் துறை சமர்ப்பித்துள்ளது. போலிசாரின் தகவலின்படி, அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வரை ஆக்ரோஷமாக நடந்து கொள்ளவில்லை என்றும் திடீர் தாக்குதலின்போது, குறுக்கிட்ட போலீஸ்காரர்களையும் அவர் தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கேரள மாநில டிஜிபி ஆன்லைன் வழியாக ஆஜராகி விளக்கம் அளித்தார்.

DMK vs TVK | மாறிய தேர்தல் களம்.. திமுக, தவெக வேட்பாளர்கள் இன்றே..

VS Babu Health | VS பாபு உடல்நிலை குறித்து தீயாக பரவிய தகவல்கள் - இப்போதைய நிலவரம் என்ன?

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்