தற்போதைய செய்திகள்

திடீரென மயங்கி விழுந்த தாய்.. கையில் குழந்தையோடு கதறி அழுத பெண்-கலெக்டர் அலுவலகம் முன் நடந்த கொடூரம்

தந்தி டிவி

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் ஐந்து பேரை உடனடியாக விடுவிக்க கோரி, மீனவர்களின் உறவினர்கள் ராமநாதபுரம் ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு அளித்தனர்.

கடந்த வாரம் 21-ந்தேதி மண்டபத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ஒரு படகையும் அந்த படகில் சென்ற ஐந்து மீனவர்களையும் நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் மற்றும் மண்டபம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் ஏராளமானோர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கண்ணீர் மல்க அளித்தனர். கைது செய்யப்பட்ட ஐந்து மீனவர்களில் பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் மாணவன் ஒருவன் இருப்பதாகவும் கல்லூரி கட்டணம் கட்டுவதற்காக கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றதாகவும் அவனது தாயார் கண்ணீர் மல்க கூறினார்.

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..