தற்போதைய செய்திகள்

எலுமிச்சை பழத்தை வைத்து Magic...தம்பதியை கட்டிபோட்டு செய்த காரியம் - மொத்த வீட்டையும் சுருட்டி சென்ற பலே சாமியார்

தந்தி டிவி

நாமக்கல்லில், ஜவுளி உற்பத்தி உரிமையாளர் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தில், 7 பேர் கைதான நிலையில், முக்கிய நபரான சாமியார் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த ஜவுளி வியாபாரியான மணி மற்றும் அவரது மனைவி பழனியம்மாள் ஆகியோரை வீட்டில் கட்டிப்போட்டு, 28 லட்சம் ரூபாய் ரொக்கம், 18 சவரன் தங்க நகைகள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வீட்டில் செல்வம் பெருக சிறப்பு பூஜை செய்வதாகக் கூறி, மந்திரம் மூலம் எலுமிச்சம் பழத்தை தானாக மேலே செல்வது போல் ஏமாற்றி, சாமியார் இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியிருப்பது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் ஏற்கனவே 7 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், தலைமறைவாக இருந்த சாமியார் ரமேஷை போலீசார் தேடி வந்த நிலையில், ஈரோடு சோலார் பகுதியில் அவரை போலீசார் கைது செய்தனர். மேலும், இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய வேணுகோபால், ராஜா, கார்த்தி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்