தற்போதைய செய்திகள்

பட்டியல் சமூக இளைஞரை கோவிலுக்குள் அனுமதிக்காத விவகாரம்..கோவிலை இழுத்துப் பூட்டிய அதிகாரிகள் - கரூரில் பரபரப்பு

தந்தி டிவி

வீரணம்பட்டியில் காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. கோவிலைச் சுற்றியுள்ள 8 ஊர் கிராமங்களை சேர்ந்த மக்கள் இந்த கோயில் திருவிழாவை கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காளியம்மன் கோவிலுக்குள் சென்றுள்ளார். அப்போது அந்த இளைஞரை சட்டையை பிடித்து கோவிலுக்குள் வரக்கூடாது என்று வெளியே தள்ளியிருக்கிறார்கள். சாமி கும்பிட்டு விட்டு திருநீர் கேட்ட போதும் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை அடுத்து இரு பிரிவினருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, கடவூர் வட்டாட்சியர் முனிராஜ் தலைமையில் அதிகாரிகள் அமைதிப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து, காளியம்மன் கோவில் தற்காலிகமாக இழுத்து பூட்டப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்