தற்போதைய செய்திகள்

தண்டவாளத்தில் லாரி டயர்கள் வைத்த விவகாரம்...தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கை - கைதானவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்

தந்தி டிவி

திருச்சி மாவட்டம் வாளாடி அருகே, தண்டவாளத்தின் நடுவே இரண்டு லாரி டயர்கள் வைக்கப்பட்ட விவகாரத்தில், மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 2ம் தேதி, கன்னியாகுமரியில் இருந்து சென்னை நோக்கி சென்ற விரைவு ரயில், திருச்சி மாவட்டம் வாளாடி அருகே தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த இரண்டு டயர்கள் மீது மோதியது. இதனால், ரயிலின் முதல் நான்கு பெட்டிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ரயிலின் மின் இணைப்பு சரி செய்த பிறகு, 45 நிமிடம் தாமதமாக அந்த ரயில் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றது. இது தொடர்பாக ஐந்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்திய போலீசார், மேல வாளாடியை சேர்ந்த அண்ணாவி, கார்த்திக் வெங்கடேஷ், பிரபாகரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்