தற்போதைய செய்திகள்

குடிநீரில் மனித கழிவு கலந்த விவகாரம் - வெகுண்டெழுந்த ஊர் மக்கள் - புதுக்கோட்டையில் பரபரப்பு

தந்தி டிவி

புதுக்கோட்டை அருகே குடிநீரில் மனித கழிவு கலந்த விவகாரத்தில் நீர்தொட்டியில் ஏறி போராடியவர்களை கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த இதர சமுதாய மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரம் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் உண்மை குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி நீர்தொட்டியில் ஏறி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த இதர சமுதாய மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். வெளியூர் ஆட்களை வரழைத்து பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் பிரச்சினையை தூண்டுவதாக குற்றம்சாட்டிய அவர்கள், இந்த பிரச்சினையில் உண்மை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். போலீசாரின் சமரச பேச்சுவார்த்தை, வாக்குறுதியை தொடர்ந்து, அப்பகுதி மக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்