தற்போதைய செய்திகள்

போர்க்களமாக வெடித்த ஹிஜாப் விவகாரம்..ஈரான் சிறையில் மர்ம மரணம் அடைந்த பெண்

தந்தி டிவி

சரியாக ஹிஜாப் அணியாததால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருந்த போது மர்ம மரணம் அடைந்த இளம் பெண்ணுக்காக குரல் கொடுத்து நடத்தப்பட்ட போராட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 92ஆக அதிகரித்துள்ளது.

மாஷா அமினி என்ற 22 வயது இளம்பெண் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி கைது செய்யப்பட்டு பலமாக காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மாஷாவுக்கு நீதி கேட்டு 2 வராங்களாக போராட்டங்கள் தொடர்ந்து வரும் நிலையில், பாதுகாப்புப் படையினர் - போராட்டக்காரர்கள் இடையே நடந்த மோதலில் இதுவரை 92 பேர் உயிரிழந்துள்ளனர். போராட்டங்களை மட்டுப்படுத்த சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டு இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் போராட்டங்கள் தொடர்ந்து வரும் நிலையில், தலைநகர் டெஹ்ரானில் போராடிய பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பாதுகாப்புப் படைக்கும் மோதல் வெடித்தது... துப்பாக்கியால் சுடும் சப்தம் சாலைகள் முழுவதும் நிரம்பி இருந்தது...

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்