தற்போதைய செய்திகள்

ஓட ஓட விரட்டி இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம்..ஒரு ஆட்டுக்குட்டியால் வந்த வினை - விசாரனையில் வெளிவந்த உண்மை

தந்தி டிவி

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இளைஞரை ஓட ஓட விரட்டி கொலை செய்த வழக்கில் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வடக்கு கிடாரகுளத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர், வழக்கு ஒன்றிற்காக தென்காசி நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு திரும்பிய போது, அடையாளம் தெரியாத கும்பலால் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் கொலையாளிகளை போலீசார் தேடி வந்த நிலையில், தூத்துக்குடி சாத்தான் குளம் நீதிமன்றத்தில் 3 பேர் சரணடைந்தனர். ஆலங்குளம் அருகே நோட்டூரை சேர்ந்த இசக்கி முத்து, இசக்கி பாண்டி மற்றும் ரமேஷ் ஆகிய மூவரை கைது செய்த போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், கடந்த 2020 ஆம் ஆண்டு நாச்சியார்பட்டியில் நோட்டூரை சேர்ந்த முத்துப்பாண்டி மற்றும் அவர்களது நண்பர்கள் ஆட்டுக்குட்டியினை திருடியுள்ளனர். அப்போது, அங்கு பாதுகாப்பில் இருந்த மணிகண்டன், அவரது தந்தை மற்றும் சகோதரர்கள் அவர்களுடன் சண்டையிட்டதில் முத்துப்பாண்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், வழக்கில் ஆஜராக நீதிமன்றம் வந்த மணிகண்டன் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இந்நிலையில், மூவரை கைது செய்துள்ள போலீசார், மேலும் ஆறு பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்...

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்