தற்போதைய செய்திகள்

அயன் படத்தை மிஞ்சிய சம்பவம்.. செக்கிங்கிற்கு பயந்து தங்கத்தை குப்பையில் வீசிய குருவி - 7 நாட்கள் அடைத்து வைத்து சித்ரவதை

தந்தி டிவி

நடிகர் சூர்யாவின் அயன் பட பாணியில் குருவியாக செயல்பட்ட இளைஞர், தான் வேலை பார்த்த கும்பலாலே கடத்தி சித்ரவதை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்குடியை சேர்ந்தவர் இளைஞர் ஸ்ரீராம். இவர் சென்னை, மண்ணடி பகுதியில் தங்க கடத்தல் கும்பலால் கடத்தி சித்ரவதை செய்யப்பட்டு வருவதாக, ஸ்ரீராமின் நண்பர் அசாரூதின் வாட்ஸ் அப்பில் செய்தி பரப்பியுள்ளார். இந்த தகவல் பூக்கடை காவல் துணை ஆணையர் கவனத்திற்கு செல்லவே, அசாருதீனை தொடர்பு கொண்டு தகவல்களை சேகரித்த போலீசார், பாரிமுனை பகுதியில் உள்ள விடுதி ஒன்றை சுற்றி வளைத்தனர். விடுதியில் பலத்த காயங்களுடன் ஸ்ரீராமை மீட்ட போலீசார், மூவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், தங்க கடத்தல் கும்பலுக்கு குருவியாக செயல்பட்டு வந்த ஸ்ரீராம், சில நாட்களுக்கு முன்பு மஸ்கட்டில் இருந்து 300 கிராம் தங்கத்தை மும்பை விமான நிலையம் மூலம் கடத்தியுள்ளார். அப்போது, போலீசாரின் சோதனையை கண்டு பயந்து போன ஸ்ரீராம், தங்கத்தை அங்குள்ள குப்பை தொட்டியில் போட்டதாக கும்பலிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், குப்பை தொட்டியை சோதனை செய்த கும்பல் தங்கம் கிடைக்காததால் ஆத்திரமடைந்துள்ளனர். இதனால், ஸ்ரீராமை கடத்திய கும்பல், ஒரு வாரமாக விடுதியில் வைத்து சித்ரவதை செய்து வந்தது தெரியவர, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?