தற்போதைய செய்திகள்

காலிங் பெல் வேலை செய்யாததால் நடந்த சம்பவம்... பைப்லைன் வழியாக 3வது மாடி சென்றவர் மரணம் என புகார்

தந்தி டிவி

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே வசித்து வந்தவர் தென்னரசு.

இவர் நள்ளிரவில் வீடு திரும்பிய போது வீட்டின் காலிங் பெல் வேலை செய்யாததால், மனைவிக்கு பலமுறை போன் செய்துள்ளார்.

இதில், மனைவி போனை எடுக்காததால் மாடியில் இருந்து வீட்டினுள் நுழைய பைப் வழியாக இறங்கியதாகவும், அப்போது கால் தவறி கீழே விழுந்து உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், தென்னரசை உறவினர்களான கோவிந்த ராஜ் மற்றும் வினோத் ஆகியோர் தென்னரசை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

ஆனால்,தென்னரசின் மரணத்தில் மர்மம் உள்ளதாகவும், கோவிந்தராஜ் மற்றும் வினோத் ஆகிய இருவரும் அடித்து கொலை செய்துள்ளதாக குற்றச்சாட்டு முன்வைத்த உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதோடு சாலை மறியலிலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்