தற்போதைய செய்திகள்

சிவன் கோயில் குடமுழுக்கில் நெகிழ்ச்சி சம்பவம்.. சீர் கொண்டு வந்த இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள்- மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

தந்தி டிவி

ஆலங்குடி சிவன் கோயில் குடமுழுக்கிற்கு இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ மக்கள், பாரம்பரிய முறைப்படி சீர் கொண்டு வந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியிலுள்ள அறம் வளர்த்த நாயகி சமேத பேரூராண்டார் கோயிலில், நாளை குடமுழுக்கு நடைபெறவுள்ளது. இதனையொட்டி அப்பகுதியிலுள்ள தேவாலயம் மற்றும் பள்ளி வாசல்களிலிருந்து, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ மக்கள், பாரம்பரிய முறைப்படி சீர் எடுத்து வந்தனர். அவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில், மேள தாளங்கள் முழங்க வரவேற்பு அளித்தனர். மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இந்த நிகழ்வு அமைந்திருந்தது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்