தற்போதைய செய்திகள்

2வது மனைவியுடன் இருந்து கொண்டு மகளுக்காக கொடுக்க மறுத்த கணவன் - மகனுடன் முதல் மனைவி செய்த பகீர் காரியம்

தந்தி டிவி

இரண்டாவது மனைவியுடன் வசித்துக் கொண்டு மகளின் திருமண செலவுக்கு பணம் தர மறுத்த கணவனை, முதல் மனைவி கொடூரமான முறையில் பழிவாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரங்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வேலு. 48 வயதான இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ள நிலையில், கடந்த 10 வருடத்திற்கு முன்பே முதல் மனைவியும், அவருடைய குழந்தைகளும் சண்டையிட்டு பிரிந்து சென்றுள்ளனர்...

இதன்பின்னர், தனது இரண்டாவது மனைவி மற்றும் குழந்தைகளுடன் பழைய சிறுவாங்கூர் கிராமத்தில் வேலு வசித்து வந்திருக்கிறார்...

முதல் மனைவியான பொன்னம்மாள், அவருடைய மகளுக்கு திருமண ஏற்பாடு செய்யவே, அதற்கு பணத்தேவை ஏற்பட்டுள்ளது....

இதனால், பத்து வருடங்களாக தன்னை பிரிந்து, இரண்டாவது மனைவியுடன் வசித்து வந்த கணவனிடம் பொன்னம்மாள் பணம் கேட்கவே, அவர் மறுத்ததால் ஆத்திரமடைந்திருக்கிறார்...

கடுங்கோபத்திலும், தீராத ஆத்திரத்திலும் வீட்டிற்கு வந்த பொன்னம்மாள், தனது மகன் தசரத ராமனை அழைத்து, உன் தந்தை நம்மை அசிங்கப்படுத்திவிட்டார் எனவும் , அவரை ஏதாவது செய்ய வேண்டும் எனவும் கூறியதால், மகன் நடந்ததையெல்லாம் கேட்டறிந்து ஆத்திரமடைந்திருக்கிறார்...

இந்நிலையில், வீட்டிலிருந்தே கத்தியை எடுத்துக்கொண்டு கிளம்பிய அவர், தந்தையிடம் கரிசனமாக பேசுவது போல் பேசி அன்றிரவு அவருடனே வீட்டில் தங்கியிருக்கிறார்....

திடீரென நள்ளிரவில் எழுந்த தசரதராமன், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, அருகில் படுத்திருந்த தந்தையின் மார்பு மற்றும் கழுத்தில் சரமாரியாக குத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது...

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த வேலுவின் இரண்டாவது மனைவியும், அவரது குழந்தைகளும் கூச்சலிடவே, தசரத ராமன் தப்பியோடியுள்ளார்...

உடனே, அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் வேலுவை மீட்ட அவரது இரண்டாவது மனைவி, சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் கணவனை அனுமதித்திருக்கிறார்...

இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார், வேலுவின் முதல் மனைவி பொன்னாம்மாள் மற்றும் மகன் தசரத ராமனை கைது செய்து விசாரணை நடத்திய நிலையில், இருவரையும் சிறையில் அடைத்தனர்.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை