தற்போதைய செய்திகள்

விசித்திர ஆயுதத்தால் 2வது மனைவியை 12 துண்டுகளாக வெட்டி கூறு போட்ட கணவன்

தந்தி டிவி

ஜார்கண்டின் சாகேப்கஞ்ச் அருகே பல துண்டுகளாக வெட்டப்பட்ட உடல் பாகங்கள் இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது.

அதனடிப்படையில் அங்கு சென்ற போலீசார், இளம்பெண்ணின் உடல் பாகங்கள் சிதறி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

12 பாகங்களை கிடந்த உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், இறந்தது பழங்குடியினத்தை சேர்ந்த ரூபிகா பஹாதின் என்பதும், அவரது கணவரான தில்தார் அன்சாரியே இந்த கொடூரத்தை அரங்கேற்றியதும் தெரிய வந்துள்ளது.

ரூபிகாவுடன் 2 வருடங்களாக தொடர்பில் இருந்த தில்தார் அன்சாரி, 2வது திருமணம் செய்துள்ளார்.

இந்த நிலையில், ரூபிகாவை கொலை செய்த அவர், உடலை பல துண்டுகளாக வெட்டி வீசியுள்ளார்.

கொலைக்கான காரணம் குறித்து தில்தார் அன்சாரியிடம் விசாரித்து வரும் போலீசார், உடலை மின்சாரத்தில் பயன்படுத்தப்படும் கூர்மையான ஆயுதத்தால் வெட்டியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

BREAKING || ஈரான் போரில் உலகுக்கே பெரும் ஷாக் - அமெரிக்காவின் அதிமுக்கிய அறிவிப்பு

Tamilnadu | Madras Highcourt | "கடும் நடவடிக்கை" - ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

Coimbatore | School | மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்... 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

BREAKING || OPS | TN Politics | திடீரென தன் முடிவை மாற்றிய ஓபிஎஸ்

Breaking | Vijay | CBI | இன்று ஆஜராகாத விஜய்.. CBIன் நெக்ஸ்ட் மூவ் - அதிரும் அரசியல் களம்