தற்போதைய செய்திகள்

கல்லை போட்டு கொல்ல வந்த கணவன்.. கட்டையால் அடித்து கொன்ற மனைவி | Ranipet | wife beat husband

தந்தி டிவி

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை அருகேயுள்ள சின்ன தகரகுப்பத்தை சேர்ந்தவர் தேவராஜ். லாரி மெக்கானிக்கான இவருக்கு, பானுமதி என்பவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், மதுவுக்கு அடிமையான தேவராஜ், மதுபோதையில் அடிக்கடி மனைவியை தாக்கி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதேபோல் சம்பவத்தன்றும் மனைவியிடம் தகராறு செய்த தேவராஜ், அவரின் தலையில் ஹாலோ பிளாக் கல்லை போட்டு கொல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதிலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பானுமதி, தன்னை தற்காத்து கொள்வதற்காக கணவனை ரீப்பர் கட்டையால் அடித்து கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தேவராஜின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவரது மனைவி பானுமதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்