தற்போதைய செய்திகள்

கைக் குழந்தையின் அழுகையை நிறுத்திய காவலர்

தந்தி டிவி

திருச்செந்தூர் முருகன் கோயிலில், கூட்ட நெரிசலில் சிக்கித்தவித்த கைக்குழந்தையின் அழுகையை நிறுத்திய காவலரின் செயல் அனைவரையும் கவர்ந்துள்ளது. விடுமுறையை ஒட்டி, திருச்செந்தூர் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கைக்குழந்தையுடன் வந்த தம்பதியர் குழந்தையின் அழுகையை சமாளிக்க முடியாமல் திண்டாடிய போது, அங்கு பணியில் இருந்த காவலர் தங்க பாண்டியன் குழந்தையை வாங்கி அதன் அழுகையை நிறுத்த பல்வேறு முயற்சிகளை செய்தார். நெருக்கடியான பணிகளுக்கு இடையே காவலரின் இந்த செயல் அங்கிருந்த பக்தர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்