தற்போதைய செய்திகள்

பாட்டியை கொலை செய்த பேரன்.. "வாகனம் வாங்குவதற்காக செய்தேன்".. கிருஷ்ணகிரியில் பரபரப்பு

தந்தி டிவி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே, மூதாட்டி கொலை வழக்கில், பேரனே கொலை செய்தது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர்.

ஊத்தங்கரை அடுத்த கும்மனூர் கிராமத்தில் வசித்து வந்த பொன்னியம்மாள் என்ற மூதாட்டி, கடந்த மாதம் 31ஆம் தேதி மாந்தோப்பு அருகே மர்மநபரால் கொலை செய்யப்பட்டார். பின்னர், அவர் அணிந்திருந்த தங்க நகையையும், 6 ஆயிரம் ரூபாய் பணத்தையும் மர்மநபர் பறித்துச் சென்றார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், சந்தேகத்தின் பேரில் மூதாட்டியின் பேரனான வெங்கடேசனிடம், தங்களது பாணியில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, கொலை செய்ததை வெங்கடேசன் ஒப்புக்கொண்டார். மூதாட்டி சேமித்து வைத்த பணத்தை வைத்து வாகனம் வாங்க திட்டமிட்டிருந்த நிலையில்,. அந்தப் பணத்தை தனது மகள் வழி பேத்தியிடம் கொடுக்கச் சென்றதால் கொன்றதாக வெங்கேடசன் வாக்குமூலம் அளித்தார். அதனைத் தொடர்ந்து, வெங்கடேசனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

CM Vijay | Dindigul | ``மிகுந்த வேதனை’’ - CM விஜயையும் உலுக்கிய உயிரிழப்பு

TVK | Congress | ஏற்காவிட்டால் தவெக அமைச்சரவையில் இருந்து விலகுவோம் என பகிரங்க அறிவிப்பு

Nepal ``49 பேர் மூட்டை; அடுக்கி வைத்திருந்த சிசிடிவியை பார்த்தேன்’’ - டிராவல்ஸ் உரிமையாளர் பேட்டி

Nellai இளைஞர் தலையை அறுத்து அவர் வீட்டு வாசலிலேயே வீச்சு - நெல்லையில் உச்சகட்ட பயங்கரம்

Dindigul ``ஒரு உசுருல்ல.. நாலு பிஞ்சு உசுரு’’ - அநியாயமாக 4 குழந்தைகள் பலி; கொடூரத்தை செய்தது யார்?