தற்போதைய செய்திகள்

போட்டோ எடுக்க நகையை கழட்டி வைத்த பெண்.. திரும்பி பார்ப்பதற்குள் மாயம்.. என்ன நடந்தது?

தந்தி டிவி

கன்னியாகுமரியில் சிபிஐ அதிகாரி போல் நடித்து, பெண் ஒருவரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மேலராமன்புதூரை சேர்ந்தவர் உதிராதேவி. இவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட நபர் ஒருவர், தன்னை சி.பி.ஐ அதிகாரி என்றும், துறையில் பலருக்கும் வேலை வாங்கி கொடுத்திருப்பதாகவும் கூறி அறிமுகமாகியுள்ளார். இதேபோல் வேலை வாங்கி தருவருவதாக கூறி உதிராதேவியிடம் இருந்து 60 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்ற அந்த நபர், சான்றிதழ் சரிபார்க்க வருவதாக கூறி வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு வேலைக்காக புகைப்படம் எடுக்க வேண்டும் எனவும், அதற்காக கழுத்தில் இருந்த நகையினை கழட்டி வைக்க கூறியுள்ளார். இதை நம்பி உதிராதேவியும் கழட்டி வைக்க, 1 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் செல்போனுடன் நபர் தப்பி சென்றுள்ளார். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்த போலீசார் சந்திரம்புதூர் பகுதியை சேர்ந்த அன்புகுமார் என்பவரை கைது செய்தனர்.

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்