தற்போதைய செய்திகள்

கண்ணீர் மல்க கோரிக்கை வைத்த சிறுமி... முதல்வர் எடுத்த அதிரடி ஆக்‌ஷன் - அடுத்த நிமிடமே நடந்த மாற்றங்கள்

தந்தி டிவி

டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், திருச்சியிலிருந்து விமானம் மூலமாக சென்னை திரும்பினார். அப்போது விமான நிலையத்தில், கோவையைச் சேர்ந்த காவியா என்ற சிறுமியும் அவரது குடும்பத்தினரும், முதல்வரிடம் கண்ணீர் மல்க உதவி கோரினர். இதனையடுத்து சிறுமியின் குடும்பத்தினருக்கு உதவ, முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டார். இதனையடுத்து காவியாவின் குடும்பத்தினரிடம் கோரிக்கைகளை கேட்ட திருச்சி ஆட்சியர், காவியா மற்றும் அவரது சகோதரரின் கல்வி செலவு, திருச்சி ஆட்சியரின் பொது நிவாரண நிதியிலிருந்து செலுத்தப்படும் என அறிவித்தார். மேலும் சிறுமியின் குடும்பத்திற்கு வீடு வழங்க, கோவை ஆட்சியரிடம் கேட்டுக்கொண்டார். இந்தநிலையில் கோவை அரசு அதிகாரிகள், சிறுமியின் தற்போதைய வீட்டை பார்வையிட்டு, பல்வேறு தகவல்களை பெற்று சென்றுள்ளனர். இதனையடுத்து முதல்வருக்கு நன்றி தெரிவித்த காவியா, முதல்வரை நேரில் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்