தற்போதைய செய்திகள்

சென்னையின் பிரபல ரவுடியை கொலை செய்த கும்பல்

தந்தி டிவி

சென்னை, சென்ட்ரல் அருகே கல்லறை பகுதியை சேர்ந்தவர் கல்லறை அப்பு. பிரபல ரவுடியான இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், கல்லறை அப்பு தனக்கு சொந்தமான ஆட்டோவை, விஜய் என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். இதில், கடந்த ஆறு மாதமாக ஆட்டோ வாடகை தராமல் விஜய் இழுத்தடித்து வந்த நிலையில், இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், சம்பவத்தன்று விஜியின் வீட்டிற்கு சென்ற அப்பு, கத்தியை காட்டி அவரிடம் தகராறு செய்த நிலையில், விஜியின் கூட்டாளிகள் அப்புவை தாக்கி அவரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளனர். இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார், திருவேங்கடத்தில் வசித்து வந்த விஜி, அவருடைய சகோதரர் ராஜி உட்பட ஆறு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்