தற்போதைய செய்திகள்

மணல் அள்ளிய கும்பலை தடுத்து நிறுத்திய முன்னாள் அமைச்சர்

தந்தி டிவி

ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியகுளம் கண்மாயில் சட்டவிரோதமாக மண் மற்றும் மணல்களை, 50-க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் ஏற்றிக் கொண்டு அதிவேகமாக செல்வதாக பொதுமக்களிடையே புகார் எழுந்தது. தகவலின் பேரில், பெரியகுளம் கண்மாய்க்கு சென்ற அதிமுக முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் தலைமையிலான அக்கட்சியினர், மண் மற்றும் மணல் அள்ளுவதை தடுத்தனர். அப்போது இன்பத்தமிழனிடம் அந்தக் கும்பல் வாக்குவாதத்தில் ஈடுபட்டது. தகவல் தெரிந்தும், வட்டாட்சியர் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வரவில்லை என கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, சாலையின் நடுவே முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் தர்ணாவில் ஈடுபட்டார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்