தற்போதைய செய்திகள்

நடுக்கடலில் தவித்த தமிழக மீனவர்கள்..இலங்கை கொடுத்த சிக்னல்..விரைந்து சென்ற இந்திய கடற்படை

தந்தி டிவி

எஞ்சின் பழுதாகி இலங்கை அருகே சிக்கி தவித்த பூம்புகார் மீனவர்கள் பாதுகாப்பாக சொந்த ஊர் திரும்பினர்.

பூம்புகார் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 25 ஆம் தேதி, விசைப்படகில் 16 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது படகின் எஞ்சின் பழுதடைய, 7 மீனவர்கள் மட்டும் மீன்பிடி படகும் மூலம் கரை திரும்பி தகவல் அளித்தனர். இதனிடையே, பழுதடைந்த விசைபடகு காற்றின் வேகத்தில் திசை மாறி சர்வதேச கடல் எல்லைக்குள் செல்ல, வந்து மீட்டு செல்லும் படி இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்திய கடற்ப​டை​ 9 மீனவர்கள் மற்றும் படகையும் பாதுகாப்பாக மீட்டு வந்தது. இதையடுத்து, சொந்த ஊர் திரும்பிய மீனவர்களை, கிராமத்தினர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர்.

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்