தற்போதைய செய்திகள்

'ஜெயிலர்' படத்தின் மீது எகிறும் எதிர்பார்ப்பு

தந்தி டிவி

ரஜினிகாந்த்தின் ஜெயிலர் படத்தில் நடிகை தமன்னா நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படத்தை ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இதில் ரஜினிகாந்த்துடன் ஷிவ் ராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகிபாபு உள்ளிட்டோர் நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், மலையாள உச்சநட்சத்திரமான மோகன்லால் நடிப்பதை அண்மையில் படக்குழு உறுதி செய்தது.

தொடர்ந்து தெலுங்கில் பிரபல நடிகரான சுனில் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தமன்னா நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது.

மிகப்பெரிய நட்சத்திரங்கள் நடிப்பதை படக்குழு அடுத்தடுத்து அறிவித்து வருவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

🔴LIVE : CM Vijay | TVK | MLA | உதயநிதி தொட்ட விஷயம்.. அமைச்சர் ஆதவ் ஆக்ரோஷம்

CJP |Delhi | Supreme Court | மாணவர்கள் மீது தாக்குதல் - களமிறங்கும் டீம்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி

Minister Vignesh | "இந்த மிரட்டுறதுலாம் இந்த வேணாம்.." அமைச்சர் பரபரப்பு பேட்டி

"சபாநாயகர் எடுத்த நடவடிக்கை சரி தான்"ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

BREAKING || தமிழகமே எதிர்பார்த்த `மேகதாது’ விவகாரம் - சென்னையில் மவுனம் கலைத்த DKS