தற்போதைய செய்திகள்

மகனை துடிக்க துடிக்க கொன்று சுத்தியலுடன் போலீஸ் ஸ்டேஷன் வந்த தந்தை

தந்தி டிவி

சேலம் மாவட்டத்தில், சொத்து தகராறு காரணமாக, பெற்ற மகனை அடித்துக் கொன்ற தந்தை காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

கெங்கவல்லி அருகே பள்ளக்காடு நடுவீதி பகுதியை சேர்ந்த 85 வயதாகும் வையாபுரி என்பவருக்கு, பூமாலை, துரைராஜ் ஆகிய 2 மகன்களும், சகுந்தலா என்ற மகளும் உள்ளனர். மூத்த மகன் பூமாலை இறந்த நிலையில், துரைராஜுடன் வையாபுரி வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான 3 சென்ட் நிலம் தொடர்பாக குடும்பத்தாரிடம் அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கோயில் விழாவுக்காக துரைராஜின் மனைவி, மகன் மற்றும் மகள் ஆகியோர் காமாக்காபாளையம் சென்றதால், தந்தை மகன் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது சொத்து சம்பந்தமாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, வீட்டின் அருகிலுள்ள மாட்டுக்கொட்டகையில் மதுபோதையில் துரைராஜ் உறங்கியுள்ளார். அப்போது, சுத்தியலை கொண்டு துரைராஜின் தலையில் வையாபுரி பலமாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே துரைராஜ் உயிரிழந்தார். இதையடுத்து, கொலைக்கு பயன்படுத்திய சுத்தியலுடன் கெங்கவல்லி காவல்நிலையத்தில் வையாபுரி சரணடைந்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துரைராஜின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, வையாபுரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை