தற்போதைய செய்திகள்

தப்பி ஓடிய சிறுத்தை.. பதறிப்போன கிராம மக்கள்.. பத்திரமாக மீட்ட வனத்துறையினர்..

தந்தி டிவி

தப்பி ஓடிய நமீபிய சிறுத்தை பத்திரமாக மீட்கப்பட்டது. கடந்த ஆண்டு நமீபியாவிலிருந்து மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவிற்கு 8 சிறுத்தைகள் கொண்டு வரப்பட்டன. அதில் ஒரு சிறுத்தை தப்பி ஓடி 5 நாட்கள் மாயமானதாகக் கூறப்பட்ட நிலையில், வனத்துறையினர் சிறுத்தையை பத்திரமாக மீட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குனோ பூங்காவில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜார் பரோடா கிராமத்தில் காணாமல் போன Oban சிறுத்தை முதலில் தென்பட்டது. பின்பு அங்கிருந்த ஆற்றில் நீர் அருந்தியது. தேசிய பூங்கா எல்லையில் சிறிது நேரம் சுற்றித் திரிந்தாலும் உள்ளே நுழையவில்லை. பிறகு பல இடங்களில் சுற்றித் திரிந்த Oban-ஐ ராம்புரா கிராமத்தில் வைத்து வனத்துறையினர் மீட்டுள்ளனர்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ