தற்போதைய செய்திகள்

சந்திரபாபு நாயுடு உருவ பொம்மையை எரித்த ஓய்.எஸ்.ஆர் கட்சியினர்.. வெடித்த போராட்டம்.. ஆந்திராவில் பரபரப்பு

தந்தி டிவி

ஆந்திரா மாநிலம் குப்பம் பகுதியில் தெலுங்கு தேசம் மற்றும் ஓய்.எஸ்.ஆர் கட்சினர் மாறி மாறி போராட்டம் நடத்தியுள்ளனர்.

ஆந்திரா மாநிலம் குப்பம் பகுதியில் முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சி தலைவரும் சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ் குப்பம் முதல் இச்சாபுறம் வரை பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். அப்போது அவர் எஸ்.சி எஸ்.டி பிரிவினர் குறித்து விமர்சனம் செய்ததாக கூறி ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகன் ஆகியோரின் உருவ பொம்மை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை கண்டித்து தெலுங்கு தேசம் கட்சியினர் பேரணியாக சென்றபோது, போலீசார் தடுக்க முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பின்னர், உருவ பொம்மைகளை எரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, குப்பம் காவல் நிலையம் முன்பு தெலுங்கு தேசம் கட்சியினர் தர்ணாவில் ஈடுபட்டனர். இது குறித்து குப்பம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்