தற்போதைய செய்திகள்

உடலை அடக்கம் செய்வதில் ஏற்பட்ட தகராறு... ஆரணியில் பரபரப்பு

தந்தி டிவி

ஆரணி அருகே நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தில் இறந்தவரின் உடலை புதைப்பதில் ஏற்பட்ட தகராறில், தோண்டப்பட்ட பள்ளத்தை ஊராட்சி மன்ற தலைவரின் கணவரே மூடினார்.

சேவூர் ஊராட்சிக்குட்பட்ட பி.ஆர். நகர் பகுதியை சேர்ந்த சின்ன குழந்தை என்ற பெண் இறந்துள்ளார்.

அவரது உடலை சேவூரில் அடக்கம் செய்ய 4 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டும் என்பதால், ஆரணி நெடுஞ்சாலையோரம் அடக்கம் செய்ய உறவினர்கள் முடிவெடுத்துள்ளனர்.

உடலை அடக்கம் செய்ய பள்ளம் தோண்டியபோது, அங்கிருந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால், அங்கு விரைந்த போலீசார் அனைவரையும் விரட்டியடித்தனர்.

பின்னர், உடலை அடக்கம் செய்ய தோண்டப்பட்ட பள்ளத்தை ஊராட்சி தலைவர் தரணியின் கணவரே மூடினார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்