தற்போதைய செய்திகள்

தாயின் மறைவால் தவித்த பிள்ளைகள்...வளர்த்து ஆளாக்கி சீர்வரிசையுடன் திருமணம் - அன்னையாய் மாறிய அரசு மருத்துவர்கள்... மதுரையில் நெகிழ்ச்சி சம்பவம்

தந்தி டிவி

மதுரை அரசு மருத்துவமனையில், வளர்ந்த வடமாநில பெண்ணுக்கு, மருத்துவர்கள் சீர்வரிசைகளுடன் திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த பெண் மதுரை நெஞ்சக நோய் மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்தபோது, உயிரிழந்தார். உடன் வந்த ஆண் மற்றும் பெண் குழந்தைகள் இருவரும் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனையடுத்து, அரசு மருத்துவமனையில் உள்ள உறைவிட மருத்துவ அலுவலர் காந்திமதிநாதன் , இரு குழந்தைகளையும் அரவணைத்து தங்களுடைய பிள்ளைகளைபோல் படிக்க வைத்து வளர்த்தார். தற்போது, 22 வயதாகும் பெண்ணுக்கு, அரசு மருத்துவமனை மருத்துவர்கள், ஊழியர்கள் இணைந்து, சீர்வரிசைகளுடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். மேலும் மணமக்கள் வீடு கட்டிக்கொள்வதற்கு, அவனியாபுரம் அருகே வளையங்குளத்தில் ஒன்றரை சென்ட் மனையும் வாங்கிக்கொடுத்துள்ளனர். மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களின் இந்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், பொதுமக்களின் பாராட்டையும் பெற்றுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்