தற்போதைய செய்திகள்

விளையாடிக்கொண்டிருந்த குழந்தை..திடீரென நிகழ்ந்த சோகம்..

தந்தி டிவி

திருத்துறைப்பூண்டி அருகே நந்திமாங்குடி பகுதி சேர்ந்த புகழேந்தி-ஹேமலாதேவி தம்பதிக்கு, 2 வயதில் மது ஷாலினி என்ற பெண் குழந்தை இருந்தது. புகழேந்தி வேலைக்கு சென்றவுடன், ஹேமலாதேவி குழந்தையுடன் வீட்டு வேலைகளை செய்து கொண்டு இருந்தார். சிறிது நேரத்தில் குழந்தை காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், அக்கம்பக்கத்தில் தேடி உள்ளார். அப்போது அருகில் உள்ள குளத்தில் மது ஷாலினி தவறி விழந்து உயிரிழந்தது தெரியவந்தது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குழந்தை மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்