தற்போதைய செய்திகள்

முன்னாள் - இன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய கார்.. சர்ச்சையில் சிக்கிய ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள்

தந்தி டிவி

புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பயன்படுத்தும் கார், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்படாமல் இயக்கப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு அரசு சார்பில் 2019ல் வழங்கப்பட்ட இனோவா காரை தற்போது சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பயன்படுத்தி வருகிறார்.

இந்த காரின் எண், நம்பர் பிளேட்டிலும் எழுதப்பட்டு உள்ளது.

ஆனால், இதுவரை அந்த கார், புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்படவில்லை என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

அமைச்சர்கள் பயன்படுத்தும் காரையே, மாவட்ட நிர்வாகம் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள், மூன்று ஆண்டுகளாக பதிவு செய்யாமல் இருப்பதும் அது சாலைகளில் இயக்கப்பட்டு வருவதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்