தற்போதைய செய்திகள்

பற்றி எரியும் ஹிஜாப் விவகாரம் - செஸ் வீராங்கனை அதிரடி

தந்தி டிவி

சர்வதேச செஸ் போட்டியில் ஹிஜாப் அணியாமல் ஈரானிய வீராங்கனை பங்கேற்றதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி கலாச்சாரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்ட மாஷா அமினி என்ற இளம்பெண் காவலில் இருந்த போது மர்ம மரணம் அடைந்தார்... இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன... போராட்டக்காரர்கள் மீது ஈரானிய அரசு அடக்கு முறைகளைக் கட்டவிழ்த்தது... நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்... மரண தண்டனைகளும் நிறைவேற்றப்பட்டன... தொடர் போராட்டங்களால் அடி பணிந்த ஈரான் அரசு கலாச்சாரக் காவல் படையைக் கலைத்தது... போராட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் மக்கள் தங்கள் எதிர்ப்புகளைக் காண்பித்து வருகின்றனர்... போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த ஈரானிய நடிகை கைது செய்யப்பட்ட நிலையில், கஜகஸ்தானின் அல்மாட்டியில் நடந்த சர்வதேச செஸ் போட்டியில்

ஈரான் வீராங்கனை சாரா காடெம் ஹிஜாப் அணியாமல் பங்கேற்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது... ஏற்கனவே ஹிஜாப் விவகாரம் பற்றி எரிந்து வரும் நிலையில், இச்சம்பவம் மேலும் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியுள்ளது...

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்