தற்போதைய செய்திகள்

சிறுமியை எரித்து கொன்ற கொடூரர்கள் - நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

தந்தி டிவி

விழுப்புரம் அருகே முன்விரோதம் காரணமாக, சிறுமியை எரித்து கொலை செய்த வழக்கில், இருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சிறுமதுரை பகுதியை சேர்ந்த ஜெயபால் என்பவருக்கும், முருகன், கலியபெருமாள் ஆகியோருக்கும் இடையே நில தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால், இரு தரப்புக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு ஜெயபாலின் மகள் ஜெயஸ்ரீயை, முருகன், கலியபெருமாள் ஆகியோர் எரித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்த வழக்கு விசாரணை விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், முருகன், கலியபெருமாள் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை, தலா 85 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு