தற்போதைய செய்திகள்

தங்கையை சீரழித்த அண்ணன்...கோவித்து சென்ற மனைவிக்கு துரோகம் - குழந்தையை மீட்ட போலீசார்

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டம் மனவாளக்குறிச்சியை சேர்ந்த பிபின்பிரியன் என்பவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், தம்பதிக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்நிலையில், பிபின்பிரியன் தனது தங்கை உறவு முறை பெண்ணை குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்தாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் பிபின்பிரியனை போலீசார் தேடி வந்த நிலையில், இந்த விவகாரம் அறிந்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி, பிபின்பிரியனை பிரிந்து தனது மகனுடன் தனியே வச்சித்து வந்தார். இந்நிலையில், மகனை பள்ளிக்கூடம் அழைத்து சென்று கொண்டிருந்த போது, அவரை வழிமறித்த பிபின்பிரியனின் தரப்பினர், 3 வயது குழந்தையை கடத்தி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்த போலீசார், பிபின்பிரியனின் செல்போன் சிக்னலை வைத்து மணவாளக்குறிச்சி பகுதியில் குழந்தையை மீட்டனர். இந்நிலையில், பிபின் பிரியன், அவரது தாய், தந்தை, சகோதரி என 18 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ள போலீசார், அவர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்