தற்போதைய செய்திகள்

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் குடியிருப்பில் வசித்து வந்த தரகர் அதிரடி கைது - சென்னையில் பரபரப்பு

தந்தி டிவி
• ஐ.எஃப்.எஸ். பண மோசடி வழக்கில் முக்கிய தரகரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்... • ஐ.எஃப்.எஸ். என்ற நிறுவனம், 84 ஆயிரம் பேரிடம் சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு பெற்று, மோசடி செய்ததாக புகார் எழுந்தது. • புகாரின்பேரில் நிறுவனத்தின் இயக்குநர்களையும், தரகர்களையும் அடுத்தடுத்து கைது செய்துவரும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், நிறுவனத்திற்கு சொந்தமான சொத்துக்களையும் முடக்கியுள்ளனர். • இந்த நிலையில், சென்னை விருகம்பாக்கத்தில் ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் தங்கி இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்த முக்கிய தரகரான ஹரிஹரனிடம் போலீசார் 2 நாட்களாக விசாரணை மேற்கொண்டுவந்த நிலையில், தற்போது அவரை கைது செய்துள்ளனர். • இதனைத் தொடர்ந்து, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயரை பயன்படுத்தி ஹரிஹரன் மோசடியில் ஈடுபட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்