தற்போதைய செய்திகள்

அமித் ஷா முன்னிலையில் முடிவுக்கு வந்த எல்லைப் பிரச்சனை...!

தந்தி டிவி

அஸ்ஸாம்- அருணாச்சல பிரதேசம் இடையே நீண்ட காலமாக நிலுவையில் உள்ள எல்லைப் பிரச்சனையை தீர்க்கும் ஒப்பந்தம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் கையெழுத்தானது.வடகிழக்கில் முழுமையான அமைதியை நிலைநாட்டும் மற்றொரு முக்கிய நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதில், அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா, அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு ஆகியோர் கையெழுத்திட்டனர். எல்லையில் உள்ள 123 கிராமங்கள் தொடர்பான சர்ச்சையை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் இந்த ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தமே இறுதியானது என்றும், எதிர்காலத்தில் புதிய உரிமை கோரலைச் செய்ய மாட்டோம் என்று இரு மாநில அரசுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு, இரு மாநில அரசுகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், இந்திய சர்வே ஆஃப் இந்தியா மூலம் இரு மாநிலங்களின் எல்லைகளை நிர்ணயம் செய்ய விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்