தற்போதைய செய்திகள்

விடுதலையான ஐடி விங் நிர்வாகிக்கு பெரிய மாலை போட்டு அதிமுகவினர் வரவேற்பு

தந்தி டிவி

அமைச்சர் துரைமுருகன் குறித்து அவதூறு கருத்து பதிவிட்டதாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த அதிமுக ஐடி விங் நிர்வாகி விடுதலை செய்யப்பட்டுள்ளார்

கோபாலபுரத்து விசுவாசி என்று சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் பேசியதை, அதிமுக ஐ.டி விங் நிர்வாகியான பொள்ளாச்சி அருண்குமார் என்பவர், தவறாக சித்தரித்து, தனது ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பகிர்ந்திருந்தார். இந்தப் பதிவு வைரலான நிலையில், வேலூர் மாவட்ட போலீசார், கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த அருண்குமாரை ஜாமினில் விடுவித்து காட்பாடி நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அப்போது, வேலூர் மாவட்ட அதிமுக சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்