தற்போதைய செய்திகள்

உ.பி.-ல் கடத்தப்பட்ட 11 வயது சிறுமி... இரண்டே நாளில் சடலமாக கிடந்த கொடூரம்...

தந்தி டிவி

உத்தரபிரதேசத்தில், பணத்திற்காக கடத்தப்பட்ட 11 வயது சிறுமி, 2 நாட்களுக்குப் பிறகு காட்டுப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில், வீட்டில் தனியாக இருந்த 11 வயது சிறுமியை, கடத்தல்காரர்களால் கடத்திச் சென்றனர். பின்னர் அவரது தந்தைக்கு போன் செய்து 30 லட்சம் ரூபாய் பிணையத் தொகையை கேட்டுள்ளனர். இரண்டு நாட்களுக்குப் பிறகு, புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் உள்ள நாக்லா புத்தி காட்டுப் பகுதியில், சிறுமி சடலமாக மீட்கப்பட்டது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்