தற்போதைய செய்திகள்

"ஒரு நாள் ஓகே, டெய்லி எப்படி..?" அண்ணண் செய்த அந்த ஒரு செயல்.. - ஆத்திரத்தில் குத்தி கொன்ற தம்பி

தந்தி டிவி

புதுச்சேரி உப்பளம் பகுதியை சேர்ந்தவர் பிரான்ஸிஸ். திருமணம் ஆகாத இவர் பெற்றோருடன் வசித்து வருகிறார். ஜவுளிக்கடையில் வேலை பார்த்து, அந்த சம்பளத்தை வைத்து பெற்றோர்களை கவனித்து வந்துள்ளார். பிரான்ஸிஸ் வீட்டின் அருகே உள்ள வீட்டில் அவரது அண்ணன் ஜான்பியர், மனைவி குழந்தைகளுடன் வசித்து வந்தார். ஜான்பியர் பெயிண்டராக வேலை பார்த்துவரும் நிலையில், தினமும் தம்பி வீட்டிலிருந்து உணவை எடுத்துச் சென்று இருக்கிறார். இதற்கு பிரான்ஸிஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிற்து. இந்நிலையில், கடந்த செவ்வாய்கிழமை இருவரும் ஒன்றாக மது அருந்தி உள்ளனர். அப்போது உணவு தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பிரான்ஸிஸ், கத்தியால் குத்தியதில் ஜான்பியர் படுகாயம் அடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜான்பியர், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த பிரான்ஸிஸை கைது செய்தனர்.

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு