தற்போதைய செய்திகள்

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (21.02.2023) | 1 PM Headlines | Thanthi TV

தந்தி டிவி
• 2023-24ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம். இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபட்டால்தான் புதிய தொழில்நுட்பங்களை புகுத்த முடியும் என்று பேச்சு. • விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்திற்கு 6 ஆயிரத்து 536 கோடி ஒதுக்கீடு. 23 லட்சம் மின் இணைப்புகளுக்கு இலவச மின்சாரம் வழங்க நடவடிக்கை. • காவிரி படுகை பெருந்திட்டதிற்கு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு. காவிரி பாசன ஆறுகள், வடிகால்களை தூரவார 90 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அறிவிப்பு. • 14 ஆயிரம் கோடி ரூபாய் கூட்டுறவு பயிர்க்கடன் வழங்கப்படும். உணவு பதப்படுத்தும் கொள்கை 2018 மறுசீரமைக்கப்படும் என்றும் அறிவிப்பு. • பயிர் பாதிப்பிலிருந்து விவசாயிகளை பாதுகாக்க 2 ஆயிரத்து 337 கோடி ரூபாய் பயிர்க்காப்பீடு மானியம் ஒதுக்கீடு. சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு. • 53 ஆயிரத்து 400 ஹெக்டேரில் நுண்ணீர் பாசன முறையை ஊக்குவிக்க 450 கோடி மானியம். பசுமைக்குடில், நிழல்வலை குடில் மூலம் உயர்மதிப்புள்ள பூக்களை ஆண்டு முழுவதும் சாகுபடி செய்ய 22 கோடி ரூபாய ஒதுக்கீடு.

Anbilmahesh Case | அன்பில் மகேஷ் வழக்கு - `தீர்ப்பு’ குறித்து அறிவித்த ஸ்பெஷல் கோர்ட்

Gingee Girl Missing | செஞ்சி சிறுமி சம்பவம் - விசாரணை வளையத்துக்குள் புதிதாக வந்த 5 பேர்..

TN Weather Update| மெல்ல மெல்ல பவர் ஏறும் புது சிஸ்டம்.. 5ம் தேதி வரை தமிழகத்திற்கு கன்பார்ம்

Rtd.IAS நடராஜனை TNIC தலைவராக நியமித்தது தமிழக அரசு

Gingee Issue| செஞ்சி பயங்கரம்.. தந்தை கைது - கிணற்றில் வீசி கொலை செய்தது கண்டுபிடிப்பு