தற்போதைய செய்திகள்

தஞ்சை மகா நந்திக்கு சிறப்பு அபிஷேகம் - கொட்டும் மழையிலும் குவிந்த பக்தர்கள்

தந்தி டிவி

தஞ்சாவூர் பெரிய கோயிலில் வீற்றிருக்கும் மகா நந்திக்கு, பிரதோஷ வழிபாடு விமரிசையாக நடைபெற்றது.

சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, மஞ்சள், பால், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதற்கிடையில் மழை பெய்த நிலையில், அதை பொருட்படுத்தாமல் நனைந்தவாறு பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

மேலும், சுற்றுலாப் பயணிகளும் மழையில் நனைந்தவாறு, தஞ்சை பெரிய கோயிலின் கட்டிடக்கலையை ரசித்து சென்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்