தற்போதைய செய்திகள்

டெஸ்லா-வால் எலான் மஸ்க்கிற்கு வந்த புதிய சிக்கல்

தந்தி டிவி

எலான் மஸ்கிற்கு சொந்தமான டெஸ்லா நிறுவனம், 3.21 லட்சம் மின்சார கார்களை பழுது நீக்குவதற்காக திரும்பப் பெற உள்ளது.

நஷ்டத்தில் இயங்கும் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கி, பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மூலம் அதை மீட்டெடுக்க முயற்சி செய்து வரும் எலான் மஸ்க்கிற்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அவரின் டெஸ்லா கார் நிறுவனம் தயாரித்த மாடல் 3 மற்றும் மாடல் ஒய் ரக மின்சார கார்களில் பழுது ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

காரை இயக்க தொடங்கிய பின், பின்பக்க விளக்குகள் ஒழுங்காக செயல்படவில்லை என்ற தவறான சமிக்கையை, காரில் பொருத்தப்பட்டுள்ள கம்யூட்டர் அளிப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதை சரி செய்ய 3.21 லட்சம் டெஸ்லா கார்களை திரும்பப் பெற்று, ஒரு புதிய சாப்ட்வேர் மூலம் இந்த பிரச்சனையை சரி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதைப் பற்றிய அறிக்கையை

டெஸ்லா நிறுவனம், அமெரிக்க தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு ஆணையத்திடம் சமர்பித்துள்ளது.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு