தற்போதைய செய்திகள்

பாகிஸ்தான் - ஆப்கன் எல்லையில் பயங்கரம்.. ராணுவ அலுவலகத்தைக் கைப்பற்றிய பாகிஸ்தான் தலிபான் இயக்கத்தினர்

தந்தி டிவி

பாகிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் நான்கு போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாநிலத்தில் உள்ள லக்கிமார்வாட் மாவட்டத்தில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் பர்கை காவல்நிலையத்தின் மீது திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது. தானியங்கித் துப்பாக்கிகள், கிரனேடுகளைக் கொண்டு தீவிரவாதிகள் சரமாரியாகத் தாக்கினர். அறுபத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பணியில் இருந்த அந்த இடத்தில், முக்கால் மணி நேரம் தாக்குதல் நீடித்தது. இந்தத் தாக்குதலுக்கு எந்த தீவிரவாதக் குழுவும் உடனடியாகப் பொறுப்பு ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த சம்பவத்துக்கு அடுத்த சில மணி நேரங்களில், ஆப்கனை ஒட்டிய பண்ணு மாவட்டத்தில், ராணுவ அலுவலகம் ஒன்றை பாகிஸ்தான் தலிபான் இயக்கத்தினர் கைப்பற்றினர். ராணுவத்தினரும் போலீஸ்காரர்களும் பிடித்து வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களை மீட்க பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்