தற்போதைய செய்திகள்

"தீ வெளிச்சத்தில் படிக்கும் குழந்தைகள்" - மின் இணைப்பு வழங்க அரசுக்கு கோரிக்கை

தந்தி டிவி

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே மின்சார இணைப்பு இல்லாததால் இருட்டில் வசிப்பதாக மலைவாழ் மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். வாசுதேவநல்லூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள கோட்டை மலை கிராமத்தில் 15 வீடுகளில் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் 3 வீடுகளுக்கு மட்டுமே மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை. வீடுகளில் மின்சார வசதி இல்லாததால், குழந்தைகள் தெரு விளக்குகளுக்கு கீழே அமர்ந்து படிக்கும் நிலை உள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்