தற்போதைய செய்திகள்

சட்ட விரோதமாக மின்சார வேலி அமைத்த விவசாயி... மின்வேலியில் தாமே தடுக்கி விழுந்து சிக்கிய பரிதாபம்... காப்பாற்ற சென்றவருக்கு நேர்ந்த சோகம்

தந்தி டிவி
• தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வயல்வெளியில் மின் வேலியில் சிக்கிய விவசாயியை காப்பாற்ற சென்ற மற்றொரு விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். • தென்காசி மாவட்டம் அருணாசலபுரத்தை சேர்ந்த விவசாயி கனகராஜ் என்பவர் தமது வயலுக்கு, சட்டவிரோதமாக மின்வேலி அமைத்துள்ளார். • இரவில் மின் இணைப்பை கொடுத்து விட்டு காலையில் மின் இணைப்பை துண்டிப்பது வழக்கமாக வைத்துள்ளார். • இந்நிலையில், மின் இணைப்பை துண்டிக்க சென்ற விவசாயி கனகராஜ், கால் தடுமாறி மின்வேலியில் சிக்கியுள்ளார். • அவரது அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வயலில் விவசாய பணி செய்து கொண்டிருந்த மற்றொரு விவசாயி முத்துராஜ் என்பவர், காப்பாற்றும் நோக்கில் வந்த போது, மின்வேலியில் சிக்கி உயிரிழந்தார். • தகவல் அறிந்து வந்த அக்கம் பக்கத்தினர் கனகராஜை மீட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். • அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. • ஆலங்குளம் போலீசார் முத்துராஜ் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். • விவசாயி மின்வேலியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்