தற்போதைய செய்திகள்

4 எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் - 3 பேர் கைது - தெலுங்கானா அரசியலில் பெரும் பரபரப்பு

தந்தி டிவி

4 எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் - 3 பேர் கைது - தெலுங்கானா அரசியலில் பெரும் பரபரப்பு

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஆளும் டிஆர்எஸ் கட்சியின் 4 எம்எல்ஏக்கள் பேரம் பேசப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஆளுங்கட்சியான டி ஆர் எஸ் கட்சியைச் சேர்ந்த 4 சட்டமன்ற உறுப்பினர்களை பாஜகவினர் பேரம் பேசியதாக புகார் எழுந்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற லஞ்ச ஒழிப்புத் துறையினர் சமயச்சழு சாமியார், ராமச்சந்திரா , நந்தகுமார் ஆகிய மூவரையும் கைது செய்தனர் . பின்னர் வழக்குப்பதிவு செய்து, மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி , லஞ்சம் கொடுத்தற்கான ஆதாரம் இல்லை என்பதால் மூவரையும் விடுவித்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்