தற்போதைய செய்திகள்

மயக்க மருந்து அளித்து மகளுக்கு மொட்டை அடித்த பெற்றோர்.. அலங்கோலப்படுத்தி அனுப்பியதால் அதிர்ந்த கணவர்

தந்தி டிவி

தெலங்கானாவில் காதல் திருமணம் செய்து கொண்ட மகளை, கணவரின் வீட்டில் இருந்து கடத்தி மொட்டை அடித்து திருப்பி அனுப்பிய பெண்ணின் பெற்றோர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலம், ஜெகத்தியாலா மாவட்டத்தில் உள்ள பாலபள்ளி கிராமத்தை சேர்ந்த மாதவ் என்பவர், பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த அட்சிதா என்பவரை காதலித்து, 6 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இதைப் பிடிக்காத அட்சிதாவின் பெற்றோர் தங்கள் உறவினர்களுடன் மாதவ் வீட்டிற்கு சென்று, அட்சிதாவை காரில் கடத்திச் சென்றனர். வீட்டுக்கு அழைத்து அவருக்கு பாலில் தூக்க மாத்திரைகளை கலந்து கொண்டு தூங்க வைத்து, அவர் மயங்கியிருந்த நேரத்தில் மொட்டை அடித்து கணவன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக, அச்சிதா அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார், அவருடைய பெற்றோர் உள்ளிட்ட உறவினர்களைத் தேடி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்