தற்போதைய செய்திகள்

மாணவனை சீரழித்த கணக்கு டீச்சர்.. 'ஸ்பெஷல்' டியூசனில் பாலியல் டார்ச்சர்.. ஆபாசம்.. சில்மிஷம்.. கொடூரத்தின் உச்சம்

தந்தி டிவி

திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தவர் தேவி... இவர் கணித ஆசிரியர் என்பதால், மாணவர்கள் மத்தியில் கண்டிப்பான ஒரு ஆசிரியையாகவே தெரிந்திருக்கிறார்.... பள்ளிக்காலங்களில் கணித ஆசிரியர்கள் தனியாக டியூசன் எடுப்பதும், அந்த டியூசனுக்கு பயத்திலோ, படிக்க வேண்டும் என்ற எண்ணத்திலோ ஒரு கூட்டமே செல்வதை நாம் பார்த்திருப்போம்...

இதற்கு ஆசிரியை தேவியும் விதி விலக்கல்ல..துறையூர் அருகே வலையபட்டி கிராமத்தை சேர்ந்த இவர், துறையூர் அடுத்துள்ள சித்திரப்பட்டியில் தங்கி டியூசன் எடுத்து வந்துள்ளார்...அந்த டியூசனில் மாணவர்கள் பலர் படித்து வரும் நிலையில், ஆசிரியை பணிபுரியும் அதே பள்ளியை சேர்ந்த 16 வயது மாணவன் ஒருவரும் அங்கு சேர்ந்திருக்கிறார்...டியூசனின் போது அந்த மாணவனிடம் ஆபாசமாக பேசியும், தவறான நடத்தையின் வாயிலாகவும் ஆசிரியை தொடர்ந்து சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது...

இது ஒருவாரு தொடர்ந்து கொண்டே இருக்க, ஒரு கட்டத்தில் மாணவனிடம் பாலியல் ரீதியாக ஆசிரியை அத்துமீறியதாக தெரிகிறது...இந்நிலையில், சமீபத்தில், ஆசிரியை தனக்கு பாலியல் தொல்லைகள் கொடுப்பதாக மாணவன் பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார்... இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், மாணவனிடம் மேற்கொண்டு விசாரித்த பிறகே போலீசில் புகாரளித்துள்ளனர்...

புகார் குறித்து விசாரணை நடத்தி வந்த போலீசார், சிறுவனுக்கு ஆசிரியை பாலியல் தொல்லை கொடுத்ததை உறுதி செய்தனர். இதையடுத்து, ஆசிரியை தேவியை போக்சோ வழக்கின் கீழ் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் சிறையில் அடைத்தனர்... போக்சோ வழக்கில் ஆசிரியை ஒருவர் சிக்கியிருப்பது பலரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் இனி தொடரக்கூடாது என்பதே அனைவரின் விருப்பமும்..

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்